Fawri+ சேவை மூலம் பஹ்ரைனின் மின்னணு நிதி பரிமாற்ற அமைப்புடன் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகத்தினை (UPI) இணைக்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் மற்றும் பஹ்ரைனின் BENEFIT ஆகியவை கூட்டு சேர்ந்துள்ளன.
இந்த அமைப்பு ஆனது இரு நாடுகளிலும் உள்ள பயனர்கள் RBI மற்றும் பஹ்ரைன் மத்திய வங்கியின் வழிகாட்டுதலின் கீழ் உடனடியாகவும் பாதுகாப்பாகவும் பணத்தை அனுப்பவும் பெறவும் அனுமதிக்கும்.
இந்த ஒத்துழைப்பு 2019 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் 2024 ஆம் ஆண்டு இந்தியா-பஹ்ரைன் உயர் கூட்டு ஆணையக் கூட்டத்தின் போது செய்யப்பட்ட உறுதி மொழிகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டாண்மையானது, பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் என்பதோடு, நிதி உள்ளடக்கத்தை ஆதரிக்கும் மற்றும் மக்களிடையேயான இணைப்பை ஆழப் படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தியாவிற்கும் பஹ்ரைனுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் ஆனது 2024 முதல் 2025 ஆம் ஆண்டு வரை 1.64 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.