TNPSC Thervupettagam

UPI-யின் 10 ஆண்டுகள் நிறைவு

August 27 , 2026 16 hrs 0 min 3 0
  • ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) இந்தியாவில் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தது.
  • UPI ஆனது 2016 ஆம் ஆண்டில் இந்தியத் தேசிய கொடுப்பனவுக் கழகத்தால் (NPCI) தொடங்கப் பட்டது.
  • ஆண்டு UPI பரிவர்த்தனைகள் 2016-17 ஆம் நிதியாண்டில் 1.78 கோடியிலிருந்து 2025-26 ஆம் நிதியாண்டில் 24,162 கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது, இது 13,000 மடங்கு உயர்வாகும்.
  • பரிவர்த்தனை மதிப்பு ₹0.07 லட்சம் கோடியில் இருந்து சுமார் ₹314 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதுடன் இது 4,000 மடங்குக்கும் அதிகமான வளர்ச்சியாகும்.
  • தற்போது ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், பூட்டான், இலங்கை, நேபாளம், சிங்கப்பூர், மொரிஷியஸ், கத்தார், கம்போடியா, கிரீஸ் மற்றும் மாலத்தீவு ஆகிய 11 நாடுகளில் UPI செயல்பட்டு வருகிறது.
  • சர்வதேச நாணய நிதியம் (IMF) UPI-ஐ பரிவர்த்தனை அளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நிகழ்நேர கட்டண அமைப்பாக அங்கீகரித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்