September 13 , 2025
10 days
56
- துபாயில் நடைபெற்ற 28வது அனைத்துலக அஞ்சல் மாநாட்டில் இந்தியா UPI–UPU ஒருங்கிணைப்பு திட்டத்தை வெளியிட்டது.
- UPI என்பது ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகத்தையும் UPU என்பது அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தினையும் குறிக்கிறது.
- இந்த முன்னெடுப்பினை அஞ்சல் துறை, NPCI சர்வதேசப் பண வழங்கீட்டு இடைமுக லிமிடெட் மற்றும் UPU ஆகியவை உருவாக்கின.
- இது விரைவான பன்னாட்டு பணப் பரிமாற்றங்களுக்கான இந்தியாவின் UPI வசதியினை UPU இடையிணைப்பு தளத்துடன் இணைக்கிறது.
- இந்தத் திட்டத்தின் கீழ் டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் பயிற்சியை ஆதரிக்க இந்தியா 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க உறுதியளித்துள்ளது.
- வளைகுடா மற்றும் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம் உட்பட பல உலகளாவிய இடங்களில் UPI தற்போது ஏற்றுக் கொள்ளப் படுகிறது.
- UPI–UPU ஒருங்கிணைப்பு 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவியப் பணம் அனுப்பும் செலவுகளை 3 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
Post Views:
56