அறிவியலாளர்கள் UPM J1040−3551 AabBab எனப்படும் அரிய நான்கு நட்சத்திர அமைப்பைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த அமைப்பில் இரண்டு புதிய செந்நிற குள்ள நட்சத்திரங்களைச் சுற்றி வரும் இரண்டு குளிர்ந்த பழுப்பு நிற குள்ள நட்சத்திரங்கள் உள்ளன என்பதோடு இது ஒரு தனித்துவமான உள்ளமைவு ஆகும்.
பழுப்பு நிறக் குள்ள நட்சத்திரங்கள் "முழுமையடையாத நட்சத்திரங்கள்" ஆகும் என்ற நிலையில் அவை நட்சத்திரங்களைப் போல உருவானாலும், ஹைட்ரஜனை இணைத்துப் பிரகாசமாக ஒளிரத் தேவையான நிறை அதில் இல்லை.
அவை குளிர்ந்ததாகவும் மங்கியதாகவும் இருப்பதால் அவற்றைக் கண்டறிவது கடினம், எனவே அவை பெரும்பாலும் பிரகாசமான துணை நட்சத்திரங்களுக்கு அருகில் காணப்படுகின்றன.
இரண்டு T-வகை பழுப்பு நிறக் குள்ள நட்சத்திரங்கள் ஓர் இணை நட்சத்திரங்களைச் சுற்றி வரும் முதல் நான்கு அமைப்பு நட்சத்திரம் இது என்பதால் இந்தக் கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்கது ஆகும்.