TNPSC Thervupettagam

UPSC 100 ஆண்டுகள் நிறைவு

October 5 , 2026 11 hrs 0 min 29 0
  • மத்தியப் பணியாளர் தேர்வாணையம் ஆனது (UPSC) 1926 ஆம் ஆண்டு நிறுவப் பட்டதிலிருந்து அதன் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்று 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
  • முதல் அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது 1926 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்று சர் ராஸ் பார்கர் என்பவரைத் தலைவராகக் கொண்டு நிறுவப்பட்டது.
  • 1935 ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம், இதனை கூட்டாட்சி அரசுப் பணியாளர் தேர்வாணையமாக (FPSC) மறுசீரமைத்தது.
  • இந்திய அரசியலமைப்பு (1950), சரத்துகள் 315 முதல் 323 ஆகியவற்றின் கீழ் UPSC-க்கு அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கியது, அத்துடன் சரத்து 320 அதன் முக்கிய செயல்பாடுகளை வரையறுக்கிறது.
  • இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்தியக் காவல் பணி (IPS) மற்றும் இந்திய வனப் பணி (IFoS) உள்ளிட்ட பணிகளுக்கான குடிமைப் பணித் தேர்வுகளை (CSE) UPSC நடத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்