TNPSC Thervupettagam
July 18 , 2025 16 hrs 0 min 39 0
  • கேரள மாநில மின்சார வாரியம் (KSEB) மற்றும் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT மும்பை) ஆகியவை மாநிலம் முழுவதும் வாகனத்திலிருந்து மின் கட்டமைப்பிற்கு (V2G) மின் மாற்றும் தொழில்நுட்பத்தினை செயல்படுத்துவதை ஆராய்வதற்காக வேண்டி ஒரு சோதனைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
  • V2G என்பது மின்சார வாகனங்களின் மின் கலங்கள் மின்சாரத்தினை மீண்டும் அதன் கட்டமைப்பிற்கு அனுப்ப உதவும் தொழில்நுட்பங்களைக் குறிக்கிறது.
  • ஒரு மின்சார வாகனம் பயன்பாட்டில் இல்லாதபோது, அது ஒரு பரவலாக்கப்பட்ட மின் கல ஆற்றல் சேமிப்புச் சாதனமாகச் செயல்பட முடியும்.
  • ஒரு செயலற்ற மின்சார வாகனம், இரு திசை மின்னேற்றியுடன் இணைக்கப்படும் போது, மின் விநியோக கட்டமைப்பிற்கு மின்சாரத்தை வழங்க முடியும்.
  • இதனால், இது இரண்டு முறைமைகளைக் கொண்டுள்ளது:
    • கட்டமைப்பிலிருந்து வாகனத்திற்கு (G2V): கட்டமைப்பு ஆற்றலைப் பயன்படுத்தி மின்சார வாகனங்களை மின்னேற்றம் செய்தல்.
    • வாகனத்திலிருந்து கட்டமைப்பிற்கு (V2G): மின்சாரத்தை மீண்டும் மின் கட்டமைப்பிற்கு அனுப்புதல்.
  • இந்த ஒத்துழைப்பு மின்சார வாகனங்களை (EV) மாநிலத்தின் மின் கட்டமைப்பில் மிக நன்கு ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உச்ச கட்ட மின் தேவையின் போது மின்சாரத்தை வழங்குவதற்காக மின்சார வாகன உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு மற்றும் நெதர்லாந்து முன்னணியில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்