TNPSC Thervupettagam

V4+இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம்

September 27 , 2026 4 days 44 0
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக நியூயார்க்கில் முதல் V4+இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.
  • விசெக்ராட் குழுவை (V4) உருவாக்கும் போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுடன் இந்தியாவை இக்கூட்டம் ஒன்றிணைத்தது.
  • V4 அமைப்பின் ஸ்லோவாக்கிய தலைமையின் கீழ் நடைபெற்ற இக்கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பங்கேற்றார்.
  • வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு, பாதுகாப்புத் துறை, இணைப்பு, கல்வி மற்றும் போக்குவரத்து ஆகியவை குறித்து இதில் விவாதிக்கப் பட்டது.
  • V4+இந்தியா வடிவமைப்பானது இந்தியா மற்றும் விசெக்ராட் குழுவிற்கும் இடையிலான உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான கூடுதல் தளத்தை வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்