TNPSC Thervupettagam

VB-G RAM G திட்டதிற்கான 375 அனுமதிக்கப்பட்ட பணிகள்

October 8 , 2026 3 days 68 0
  • விக்சித் பாரத்-ரோஸ்கார் மற்றும் ஆஜீவிகா திட்டதிற்கான உத்தரவாதம் (கிராமின்) [VB-G RAM G] சட்டம், 2025ன் கீழ் 375 அனுமதிக்கப்பட்ட பணிகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.
  • இந்தப் புதிய பட்டியலில் முந்தைய 266 பணிகளிலிருந்து 41% அதிகரிப்பு செய்யப் பட்டு உள்ளது.
  • நீர் பாதுகாப்பு, மைய கிராமப்புற உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம் சார்ந்த உள் கட்டமைப்பு, மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் பேரிடர் ஆயத்தத்திற்கான சிறப்புப் பணிகள் ஆகிய 4 தூண்களின் கீழ் இந்தப் பணிகள் ஒழுங்கமைக்கப் பட்டு உள்ளன.
  • நீர்ப் பாதுகாப்பில் அதிகபட்சமாக 128 பணிகள் உள்ளன, இதில் தடுப்பணைகள், செறிவூட்டும் குழிகள், உட்செலுத்து கிணறுகள் மற்றும் நதி புத்துயிர் பெறுதல் ஆகியவை அடங்கும்.
  • விக்சித் கிராமப் பஞ்சாயத்துத் திட்டத்தின் மூலம் பணிகள் திட்டமிடப்பட்டு கிராம சபையால் அங்கீகரிக்கப்படும்.
  • நீர்ப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, வாழ்வாதாரங்கள் மற்றும் பருவநிலை தாங்கும் திறன் ஆகியவற்றுடன் கிராமப்புற வேலைவாய்ப்பை இணைப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்