₹1.25 லட்சம் கோடி மதிப்பிலான விக்சித் பாரத்-கிராம்ஜி (VB-GRAM-G) ஊரக மேம்பாட்டு முன்னெடுப்பை மத்திய அரசு அறிவித்துள்ளதுடன் இது 2026 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும்.
இந்தியா முழுவதும் ஊரக வேலைவாய்ப்பு, தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் கிராம மேம்பாட்டை ஊக்குவிப்பதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இதற்கான இடைக்கால ஒதுக்கீடாக ₹95,692.31 கோடியை அரசாங்கம் வெளியிட்டு உள்ளது என்பதோடு மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் (MGNREGA) கீழ் ₹30,000 கோடியை ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.
வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், ஊரக சொத்துக்களை உருவாக்குவதற்கும் ஆதரவாக இந்த நிதி சுமார் 2.80 லட்சம் கிராம ஊராட்சிகளைச் சென்றடையும்.
100% மின்னணு-வாடிக்கையாளர் அறிதல் (e-KYC), நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT), முக அங்கீகாரம் மற்றும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்குதல் ஆகியவற்றை உறுதி செய்யுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்த தேசிய ஊரக மேம்பாட்டு மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.