தமிழ்நாடு அரசானது, 236 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் VETRI (துடிப்பான கல்வியை இலக்காகக் கொண்ட புகழ்பெற்ற நிறுவனம்) பள்ளிகளுக்கு 54.73 கோடி ரூபாயை அனுமதித்தது.
11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை சிறந்த கல்வி நிறுவனங்களில் பயிலச் செய்வதற்காக, ஒரு தொகுதிக்கு ஒரு பள்ளியானது VETRI பள்ளியாகத் தேர்ந்தெடுக்கப்படும்.
தன்னார்வ அடிப்படையில் மாணவர்களுக்கு JEE, NEET, CLAT மற்றும் CUET ஆகியவற்றுக்கான பயிற்சி வார இறுதி நாட்களில் நடத்தப்படும்.
ஒவ்வொரு தொகுதிக்கும் 2 அரசு ஆசிரியர்கள் மற்றும் 4 தற்காலிக ஆசிரியர்கள் அடுத்தடுத்த மாற்று வார இறுதிகளில் பயிற்சி அமர்வுகளை நடத்துவர்.
மாவட்ட மாதிரிப் பள்ளிகள் கல்விக்கான பொருட்கள், இயங்கலை வழி வகுப்புகள் மற்றும் தொழில் முறை வழிகாட்டுதலுடன் உதவுகிறது.