TNPSC Thervupettagam
October 30 , 2025 16 hrs 0 min 17 0
  • நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் ஆனது 2011 ஆம் ஆண்டு தாவர எண்ணெய் பொருட்கள், உற்பத்தி மற்றும் கிடைக்கும் தன்மை (ஒழுங்குமுறை) ஆணையைத் திருத்தியுள்ளது.
  • திருத்தப்பட்ட VOPPA ஆணை, 2025 ஆனது, அனைத்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள், பதப்படுத்தும் நிறுவனங்கள், கலவை நிறுவனங்கள், மறு சிப்பமிடும் நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கான பதிவை கட்டாயமாக்குகிறது.
  • மாதாந்திர உற்பத்தி மற்றும் இருப்பு அறிக்கைகளை தற்போது நியமிக்கப்பட்ட இயங்கலை தளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • சமையல் எண்ணெய் துறையின் ஒழுங்குமுறை மேற்பார்வை, வெளிப்படைத்தன்மை மற்றும் நிகழ்நேரக் கண்காணிப்பை மேம்படுத்துவதே இந்தத் திருத்தத்தின் நோக்கம் ஆகும்.
  • திருத்தப்பட்ட உத்தரவைப் பின்பற்றாதது VOPPA ஆணை மற்றும் 2008 ஆம் ஆண்டு புள்ளி விவரச் சேகரிப்புச் சட்டத்தின் கீழ் விதி மீறலாகக் கருதப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்