நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் ஆனது 2011 ஆம் ஆண்டு தாவர எண்ணெய் பொருட்கள், உற்பத்தி மற்றும் கிடைக்கும் தன்மை (ஒழுங்குமுறை) ஆணையைத் திருத்தியுள்ளது.
திருத்தப்பட்ட VOPPA ஆணை, 2025 ஆனது, அனைத்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள், பதப்படுத்தும் நிறுவனங்கள், கலவை நிறுவனங்கள், மறு சிப்பமிடும் நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கான பதிவை கட்டாயமாக்குகிறது.
மாதாந்திர உற்பத்தி மற்றும் இருப்பு அறிக்கைகளை தற்போது நியமிக்கப்பட்ட இயங்கலை தளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
சமையல் எண்ணெய் துறையின் ஒழுங்குமுறை மேற்பார்வை, வெளிப்படைத்தன்மை மற்றும் நிகழ்நேரக் கண்காணிப்பை மேம்படுத்துவதே இந்தத் திருத்தத்தின் நோக்கம் ஆகும்.
திருத்தப்பட்ட உத்தரவைப் பின்பற்றாதது VOPPA ஆணை மற்றும் 2008 ஆம் ஆண்டு புள்ளி விவரச் சேகரிப்புச் சட்டத்தின் கீழ் விதி மீறலாகக் கருதப்படும்.