இந்திய உச்ச நீதிமன்றமானது ஒவ்வொரு சட்டமன்றப் பகுதி/தொகுதியிலும் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை முறையை (voter verified paper audit trial - VVPAT) தோராயமாக 5 வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு அதிகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI - Election Commission of India) முந்தைய வழிகாட்டுதல்களின் படி, அனைத்து சட்டமன்றப் பகுதி/தொகுதிகளில் VVPAT ஆனது ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மட்டுமே நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது.
ஏப்ரல் - மே மாதத்தில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மாதிரி சரிபார்ப்பானது 4125 வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்களைக் கொண்டிருக்கும்.
VVPAT
VVPAT என்பது ஒரு நபர் எந்தக் கட்சிக்கு வாக்களித்தாரோ அந்தக் கட்சியின் சின்னத்தை ஒரு காகிதத்தில் குறிப்பிட்டுக் காட்டும் ஒரு சாதனமாகும்.
இந்தக் காகிதமானது ஒரு சிறிய சாளரத்தின் மூலம் 7 வினாடிகள் வெளியில் காண்பிக்கப்பட்டுப் பின்னர் அதற்குரியப் பெட்டியில் விழுந்து விடும். வாக்காளர் அந்தக் காகிதத்தை எடுத்துச் செல்ல முடியாது.
VVPAT ஆனது வாக்காளர் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தாரோ அவரின் வரிசை எண், வேட்பாளரின் பெயர் மற்றும் அவருடைய சின்னம் ஆகியவற்றைக் காண்பிக்கும்.