தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ஆனது WaveX திட்டத்தின் கீழ் WAVEX புத்தொழில் நிறுவனங்களுக்கான சவால் 2025 என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.
WaveX ஆனது ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் மொழி மீதான தொழில்நுட்பத்தில் புத்தாக்கங்களை ஆதரிக்கிறது.
2025 ஆம் ஆண்டு மே மாதத்தில், மும்பையில் நடைபெற்ற WAVES உச்சி மாநாட்டில் 30க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன.
'பாஷா சேது' என்று பெயரிடப்பட்டுள்ள இது இந்தியாவிற்கான நிகழ்நேர மொழித் தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது.
12 இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு மற்றும் குரல் தொழில் நுட்பத்திற்கான செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை உருவாக்குவதற்கு அனைத்துப் புத்தொழில் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.