WEF மன்றத்தின் GPAP முன்னெடுப்பில் 7 புதிய உறுப்பினர்கள்
January 29 , 2025 184 days 161 0
உலகளாவிய நெகிழிக் குறைப்பு நடவடிக்கை கூட்டாண்மை (GPAP) என்பது உலகப் பொருளாதார மன்றத்தினால் தொடங்கப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.
இது சமீபத்தில் சுமார் 25 நாடுகளை உள்ளடக்கிய வகையில் அதன் வலையமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
அங்கோலா, வங்காளதேசம், காபோன், கௌதிமாலா, கென்யா, செனேகல் மற்றும் தான்சானியா ஆகிய ஏழு புதிய நாடுகள் இந்த முக்கிய கூட்டாண்மை முன்னெடுப்பில் இணைந்துள்ளன.
நெகிழித் துறை ஆனது ஆண்டுதோறும் சுமார் 1.8 பில்லியன் டன் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கு காரணமாக உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும், சுமார் ஆறு மில்லியன் டன் நெகிழிக் கழிவுகள் பெருங்கடல்களில் கலக்கின்றன என்பதோடு அதற்கும் மேலான அளவிலான நெகிழிகள் நிலத்தினை மாசுபடுத்துகின்றன.