முதன்மை அறிவியல் ஆலோசகர் பிரவீந்தர் மைனி, அறிவியலில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்காக வேண்டி மகளிர் பொறியியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னெடுப்பினை (WEST) தொடங்கி வைத்துள்ளார்.
WEST என்பது ஆராய்ச்சிப் பகிர்வு மற்றும் ஆராய்ச்சி & மேம்பாட்டில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக ஒரு வலையமைப்பினைப் பயன்படுத்துகின்ற ஒரு புதிய I-STEM (இந்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியலின் ஆய்விடல்) ஆகும்.
I-STEM அமைப்பானது PM-STIAC திட்டத்தின் கீழ் வருகிறது (அறிவியல் பூர்வமாக பல பிரிவுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டை அனுமதிக்கிறது).
மற்ற திட்டங்கள்: KIRAN (பெண் அறிவியலாளர்களை ஊக்குவித்தல்); CURIE (மகளிர் பல்கலைக் கழகங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்); விக்யான் ஜோதி (உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் பெண்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித அறிவைப் பெற முயற்சித்தல்) ஆகியனவாகும்.