TNPSC Thervupettagam
November 13 , 2025 2 days 43 0
  • அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு (FAIFA) ஆனது, புகையிலை உற்பத்தி விவசாயிகளை விலக்கியதற்காக புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான WHO கட்டமைப்பு உடன்படிக்கையின் (WHO-FCTC) 11வது பங்குதாரர்கள் மாநாடு (COP11) குறித்து விமர்சித்தது.
  • COP11 ஆனது 2025 ஆம் ஆண்டு நவம்பர் 17–22 ஆம் தேதி வரை ஜெனீவாவில் நடைபெற உள்ளது.
  • FCTC நோக்கங்களுடன் பொருந்தாத இணக்கம் உள்ளதைக் காரணம் காட்டி, WHO-FCTC COP11 மாநாட்டில் விவசாயிகள் பங்கேற்பதற்கான FAIFA சங்கத்தின் கோரிக்கை நிராகரிக்கப் பட்டது.
  • FICTC பிரிவுகள் 17 மற்றும் 18 விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் நிலையான மாற்றுகளை ஊக்குவிக்கவும் அழைப்பு விடுப்பதாக FAIFA கூறியது.
  • இந்தியா உலகின் இரண்டாவது பெரிய புகையிலை உற்பத்தியாளர் மற்றும் ஃப்ளூ-கியூர்டு வர்ஜீனியா (FCV) வகை புகையிலை உற்பத்தியில் நான்காவது இடத்தில் உள்ளது.
  • 2023–24 ஆம் ஆண்டில் 12,006 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியுடன், செயல் முறைக்குட்படுத்தாத / உற்பத்தி செய்யப்படாத புகையிலையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது.
  • இந்தியாவில் 36 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக புகையிலை சாகுபடி, பதப்படுத்துதல் மற்றும் வர்த்தகத்தை நம்பியுள்ளனர்.
  • கொள்கை விவாதங்களில் இருந்து விவசாயிகளை விலக்குவது கிராமப்புறப் பொருளாதாரங்களைச் சீர்குலைத்து வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று FAIFA எச்சரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்