உலக சுகாதார அமைப்பானது (WHO - World Health Organisation) இந்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற மத்திய சுகாதார அமைச்சகமானது ஒரு உத்தி சார்ந்த செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டம் WHO இந்தியாவின் 'தேசிய ஒத்துழைப்பு உத்தி (Country Cooperation Strategy - CCS) 2019–2023: மாற்றத்திற்கான நேரம்' என்று அழைக்கப்படுகின்றது.
தனது சுகாதாரத் துறையின் இலக்குகளை அடைவதற்கு இந்திய அரசாங்கத்துடன் இணைந்துப் பணியாற்ற WHOக்கு ஒரு உத்தி சார்ந்த செயல்திட்டதை CCS வழங்குகின்றது.
தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த சுகாதார அமைச்சகம் மற்றும் அது சார்ந்த பிற அமைச்சகங்களை WHO எவ்வாறு ஆதரிக்க முடியும் என்பதை இந்தத் திட்டம் கோடிட்டுக் காட்டுகின்றது.