TNPSC Thervupettagam
October 28 , 2025 15 hrs 0 min 42 0
  • டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதிபா M. சிங், 2025–2027 ஆம் காலக் கட்டத்திற்கான உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் (WIPO) நீதிபதிகள் ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அவர் முன்னர் 2021–2022 ஆம் காலக் கட்டத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் முதல் அறிவுசார் சொத்துரிமைப் பிரிவின் தலைவராகவும் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.
  • நீதிபதிகள் ஆலோசனைக் குழுவில் WIPO அமைப்பின் நீதித்துறைகளுடனானப் பணிகளுக்கு வழிகாட்டுதலை வழங்கும் 9 சர்வதேச உறுப்பினர்களும் அடங்குவர்.
  • நீதிபதி சிங், உலக சுகாதார அமைப்பின் சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்த ஒழுங்குமுறை பரிசீலனைகள் குறித்த பணிக்குழுவிற்கும் இணைத் தலைவராக உள்ளார்.
  • 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் உலகளவில் அறிவுசார் சொத்துரிமையில் மிகவும் செல்வாக்கு மிக்க 50 நபர்களில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டுள்ளார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்