டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதிபா M. சிங், 2025–2027 ஆம் காலக் கட்டத்திற்கான உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் (WIPO) நீதிபதிகள் ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் முன்னர் 2021–2022 ஆம் காலக் கட்டத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் முதல் அறிவுசார் சொத்துரிமைப் பிரிவின் தலைவராகவும் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.
நீதிபதிகள் ஆலோசனைக் குழுவில் WIPO அமைப்பின் நீதித்துறைகளுடனானப் பணிகளுக்கு வழிகாட்டுதலை வழங்கும் 9 சர்வதேச உறுப்பினர்களும் அடங்குவர்.
நீதிபதி சிங், உலக சுகாதார அமைப்பின் சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்த ஒழுங்குமுறை பரிசீலனைகள் குறித்த பணிக்குழுவிற்கும் இணைத் தலைவராக உள்ளார்.
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் உலகளவில் அறிவுசார் சொத்துரிமையில் மிகவும் செல்வாக்கு மிக்க 50 நபர்களில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டுள்ளார்.