TNPSC Thervupettagam

WMO உலகளாவிய காலநிலை அறிக்கை 2026

March 26 , 2026 15 hrs 0 min 53 0
  • உலக வானிலை அமைப்பு (WMO) 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய காலநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது என்ற நிலையில் இதில் பூமியின் பருவநிலை "சிவப்பு எச்சரிக்கை" நிலையில் இருப்பதாக எச்சரித்துள்ளது.
  • பூமியின் ஆற்றல் சமமின்மை 65 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது அதாவது விண்வெளிக்கு வெளியேற்றப் படுவதை விட அதிக வெப்பம் பூமியில் சிக்கி ள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
  • கார்பன் டை ஆக்சைடு (CO2), மீத்தேன் (CH4) மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு (N2O) போன்ற பசுமை இல்ல வாயுக்கள் சாதனை அளவில் உயர்ந்துள்ளது புவி வெப்பமடைதலை துரிதப் படுத்துகிறது.
  • பெருங்கடல்கள் சுமார் 90% உபரி வெப்பத்தை உறிஞ்சும் நிலையில் கடல் வெப்பம் அடைதல், கடல் மட்ட உயர்வு மற்றும் கடல் அமிலமயமாதலுக்கு இது வழி வகுக்கிறது.
  • உலகளாவிய வெப்பநிலை தொழில்மயமாக்கலுக்கு முந்தைய காலத்தை விட சுமார் 1.43°C அதிகமாக உள்ள நிலையில் இது வெப்ப அலைகள், வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது.
  • இந்த அறிக்கை சுற்றுச்சூழல் அமைப்புகள், மனித ஆரோக்கியம், வாழ்வாதாரங்கள் மற்றும் உலகளாவியப் பொருளாதார நிலைத் தன்மையின் மீதான கடுமையான தாக்கங்களை எடுத்துக்காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்