WMO அமைப்பின் இயற்கை அபாயங்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள்
May 28 , 2023 707 days 379 0
சமீபத்தில் உலக வானிலை அமைப்பு (WMO) நிறுவனம் வானிலை, காலநிலை மற்றும் நீர் தொடர்பான ஆபத்துகளிலிருந்து இறப்பு மற்றும் பொருளாதார இழப்புகளின் மீதான புதுப்பிக்கப் பட்டத் தரவுகளை வெளியிட்டுள்ளது.
வங்கதேசத்தில் 1970 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுக்கு இடையில் அதிக கால நிலை தொடர்பான உயிரிழப்புகள் ஏற்பட்டன.
வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக, ஆசியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான மனித உயிரிழப்புகளை இந்தியாவும் மியான்மரும் பதிவு செய்துள்ளன.
உலகளாவிய அளவில் 1970 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுக்கு இடையில் 11,778 பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன.
இவை அனைத்திற்கும் தீவிர வானிலை, தட்பவெப்பநிலை மற்றும் நீர் தொடர்பான நிகழ்வுகளே காரணமாக உள்ளது.
இந்த நிகழ்வுகள் 2 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளையும் $4.3 டிரில்லியன் அளவிலான பொருளாதார இழப்பையும் விளைவித்தன.
வானிலை, தட்பவெப்பநிலை மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய வகையில் அதிக எண்ணிக்கையிலான பேரழிவுகள் ஆசியாவில் பதிவாகியுள்ளன.
ஆசியாவிற்கு அடுத்த படியாக, இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பேரழிவுகள் வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளை உள்ளடக்கியப் பிராந்தியத்தில் பதிவாகியுள்ளது.