உலக வானிலை அமைப்பு (WMO) 2025-2029 ஆம் ஆண்டுகளுக்கான உலகளாவிய வருடாந்திர முதல் தசாப்தப் பருவநிலைத் தகவல் புதுப்பிப்பு என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
2025 மற்றும் 2029 ஆகிய ஆண்டுகளுக்கு இடைபட்ட காலத்தில், மிகவும் குறைந்தது ஓராண்டாவது, பதிவான வெப்பமான ஆண்டை (தற்போது உள்ள 2024 ஆம் ஆண்டு) விட அதிக வெப்பமான ஆண்டாக மாற 80% வாய்ப்பு உள்ளது.
வெப்பநிலையானது தொழில்துறைக்கு முந்தைய காலத்தில் பதிவான சராசரியை விட 1.2°C முதல் 1.9°C வரை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முன்னறிவிப்பானது, ஐந்து ஆண்டு சராசரி வெப்பமயமாதல் ஆனது 1.5°C வெப்ப நிலையை விட மிக அதிகமாக இருப்பதற்கான வாய்ப்பு என்பது 70% இருப்பதாகவும் தெரிவிக்கிறது.
2023 ஆம் ஆண்டு முதல், தெற்காசியப் பகுதி அசாதாரணமாக ஈரப்பதத்துடன் உள்ளது என்ற ஒரு நிலைமையில் இது மேலும் 2025-2029 ஆகிய ஆண்டுகளுக்கு இடைபட்ட காலக் கட்டத்திலும் தொடரும்.