சீன வெளியுறவுத் துறை அமைச்சகமானது சமீபத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளுக்கு எதிராக ஒரு அதிகரிக்கப்பட்ட அளவில் தனது கடுமையானப் போக்கினை மேற்கொண்டு உள்ளது.
‘Wolf-Warrior இராஜதந்திர முறை’ என்று அழைக்கப்படும் இந்தப் புதிய அணுகுமுறையானது சீன நாட்டிற்குள் பிரபலமாக உள்ளது.
இது சீனாவின் பழமையான, செயலற்ற மற்றும் தாழ்நிலையிலான ஒரு இராஜதந்திர அணுகுமுறையை உறுதியான, செயல்திறன்மிக்க மற்றும் உயர்நிலையிலான ஒன்றாக மாற்றுவதை ஊக்குவிக்கிறது.
Wolf Warrior மற்றும் Wolf Warrior II ஆகியவை சீன சிறப்புப் படைப் பிரிவின் முகவர்களை முன்னிலைப்படுத்தும் வகையில் சீனாவில் வெற்றி பெற்ற சிறப்புத் திரைப்படங்கள் ஆகும்.
அந்தத் திரைப்படங்களின் பாணியில் பெயரிடப்பட்ட Wolf-Warrior எனும் இராஜதந்திர அணுகுமுறையானது, சீனாவின் தேசநலன்களைப் பாதுகாப்பதற்காக பெரும்பாலும் மோதல் ரீதியிலான வழிகளைக் கையாண்ட சீன அரசின் ராஜ்ஜிய அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து விவரிக்கின்றது.