உலகத்தின் முதலாவது மனிதாபிமான தடவியலுக்கான சர்வதேச மையம்
June 23 , 2018 2600 days 893 0
உலகத்தின் முதலாவது மனிதாபிமான தடயவியலுக்கான சர்வதேச மையம் குஜராத்தின் காந்திநகரில் உள்ள தடய அறிவியல் பல்கலைக் கழகத்தில் தொடங்கப்பட்டது.
இந்த மையமானது இந்தியா, நேபாளம், பூட்டான் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளில் உள்ள செஞ்சிலுவைக்கான சர்வதேச குழுவின் பிராந்திய பிரதிநிதித்துவக் குழு மற்றும் குஜராத் தடய அறிவியல் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
இந்த மையமானது, செஞ்சிலுவைச் சங்கம் குஜராத் பூகம்பத்தின் போது செய்ததைப் போல் மனிதாபிமான நடவடிக்கைகளை நெருக்கடியான நேரங்களின் போதும், பேரிடர்களின் போதும் அளிக்கும்.
குஜராத் தடய அறிவியல் பல்கலைக் கழகமானது உலகின் முதலாவது மற்றும் தடயவியல் தொடர்பான அறிவியலுக்கான ஒரே பல்கலைக் கழகமாகும்.