WOW (பெண்களின் நலன் - Wellness Of Women) கைபேசி செயலி
August 5 , 2018 2637 days 927 0
வர்த்தகம் மற்றும் தொழிற்துறைக்கான இந்திய கூட்டமைப்பின் பெண்கள் பிரிவான FICCI மகளிர் அமைப்பு WOW என்ற கைபேசி செயலியை வெளியிட்டுள்ளது.
இது நாடு முழுவதும் உள்ள பெண்கள் மத்தியில் முன்னெச்சரிக்கை சுகாதார நலன் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணுகின்றது.
WOW செயலியானது சென்னையைச் சார்ந்த அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தால் ஆதரிக்கப்படுகின்றது. இது புகழ்பெற்ற மருத்துவர்களை அணுகிடவும், சுகாதாரத் தகவல்களை பெற்றிடவும் உதவுகின்றது.
இது காணொளிக் காட்சி மூலமோ, குரல் அழைப்பு அல்லது இ-மெயில் மூலமோ மருத்துவர்களை அணுகிட பயனாளிகளுக்கு உதவும் ஒரு நடைமேடையை எளிதில் பயன்படுத்திட உதவுகின்றது.
பிக்கி (FICCI – Federation of Indian Chambers of Commerce and Industry) என்பது புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்ட இந்தியாவின் பழமையான மற்றும் மிகப்பெரிய வியாபார சங்கமாகும்.
இது அரசு சாராத மற்றும் லாப நோக்கற்ற நிறுவனம் ஆகும். இது 1927ல் நிறுவப்பட்டது.