மொத்த விலை குறியீட்டு (WPI) தொடர் மற்றும் புதிய உற்பத்தியாளர் விலை குறியீட்டு (PPI) தொடரை அரசானது 2026 ஆம் ஆண்டு ஜூன் 15 முதல் அறிமுகப்படுத்த உள்ளது, மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் WPI-க்கு பதிலாக PPI மாற்றப்பட உள்ளது.
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT), 2011–12 ஆம் ஆண்டுத் தொடருக்குப் பதிலாக 2022–23 ஆம் ஆண்டை புதிய அடிப்படை ஆண்டாகக் கொண்டு திருத்தப்பட்ட WPI-ஐ வெளியிடும்.
புதிய உற்பத்தியாளர் விலைக் குறியீடு (PPI) ஆனது உற்பத்தியாளர் அளவிலான பண வீக்கத்தை சிறந்த முறையில் அளவிடுவதற்கு வெளியீடு PPI, உள்ளீடு PPI மற்றும் சேவைகள் PPI ஆகியவற்றை உள்ளடக்கும்.
ஆரம்பத்தில், சேவைகள் PPI ஆனது வங்கி, காப்பீடு, ரயில்வே, விமானப் பயணிகள் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட ஏழு துறைகளை உள்ளடக்கும்.
படிப்படியாக நிறுத்தப்படுவதற்கு முன்பு WPI ஆனது ஐந்து ஆண்டுகளுக்கு PPI உடன் இணைந்து தொடர்ந்து வெளியிடப்படும்.