TNPSC Thervupettagam
July 15 , 2026 14 days 146 0
  • தொலைத்தொடர்புத் துறை (DoT) தனது 'சம்ரித் கிராம்' முன்னெடுப்பிற்காக, செயல் வரிசை C6 - சாதகமான சூழல் என்பதன் கீழ் தகவல் சமூகத்திற்கான உலகளாவிய உச்சி மாநாட்டின் (WSIS) விருது 2026-ஐ வென்றுள்ளது.
  • சம்ரித் கிராம்: ஒருங்கிணைந்த பிஜிட்டல்/நேரடி மற்றும் டிஜிட்டல் (Phygital) சேவை வழங்கல் மாதிரி என்பது பாரத்நெட் அகலப்பட்டை வலையமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கிராமப்புற டிஜிட்டல் மாற்ற முன்னெடுப்பாகும்.
  • இந்த முன்னெடுப்பானது கிராமங்களில் 'சம்ரித்தி கேந்திராக்களை' நிறுவி, அதன் மூலம் சுகாதாரம், கல்வி, விவசாயம், நிதிச் சேர்க்கை, ஆளுமை மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் டிஜிட்டல் மற்றும் உதவி அடிப்படையிலான நேரடிச் சேவைகளை வழங்குகிறது.
  • இந்த விருது ஜெனிவாவில் நடைபெற்ற WSIS போரம் 2026-இல் சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியத்தால் (ITU) வழங்கப்பட்டது.
  • இந்த முன்னெடுப்பிற்கு ஆற்றல் அளிக்கும் பாரத்நெட் திட்டம், 2.17 லட்சத்திற்கும் அதிகமான கிராம ஊராட்சிகளைச் சேவைக்குத் தயாரான நிலைக்குக் கொண்டு வந்துள்ளதுடன், இந்தியா முழுவதும் கிராமப்புற டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்