2025 ஆம் ஆண்டு உலகத் தொலைத்தொடர்பு மேம்பாட்டு மாநாடு (WTDC) ஆனது அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் கருத்துரு, "Universal, meaningful, and affordable connectivity for an inclusive and sustainable digital future" என்பதாகும்.
இந்த மாநாடு உலகில் இன்னும் இணைய அணுகல் இல்லாத 2.6 பில்லியன் மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 2026 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளுக்கான டிஜிட்டல் மேம்பாட்டிற்கான உலகளாவியச் செயல் திட்டத்தினை உருவாக்கியது.
அஜர்பைஜானின் டிஜிட்டல் மேம்பாடு மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சகம் நடத்துகின்ற இந்த நிகழ்வை சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) ஏற்பாடு செய்கிறது.