நிதி ஆயோக் ஆனது இந்தியாவை மாற்றும் பெண்கள் (Women Transforming India - WTI) விருதின் நான்காவது பதிப்பைத் தொடங்கியுள்ளது.
2019 ஆம் ஆண்டின் WTI விருதுகளுக்காக நிதி ஆயோக் உடன் கட்செவி நிறுவனம் இணைந்துள்ளது. இந்த விருதை வென்றவர்களுக்கு 100,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆதரவுத் தொகை வழங்கப்படும்.
இந்தியாவை மாற்றும் பெண்கள் விருது
இந்தியா முழுவதிலும் உள்ள பெண் தொழில்முனைவோரை அங்கீகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையுடன் இணைந்து இந்தியாவை மாற்றும் பெண்கள் விருது ஏற்பாடு செய்யப்படுகின்றது.
2018 ஆம் ஆண்டு WTI விருதுகளுக்கான கருத்துருவின் தொடர்ச்சியாக, இந்த ஆண்டின் கருத்துரு ‘பெண்கள் மற்றும் தொழில் முனைவோர்’ என்பதாகும்.