May 3 , 2026
14 hrs 0 min
18
- 7.6 பில்லியன் டாலர் மதிப்பிலான அரிசி மானியங்களுடன் உலக வர்த்தக அமைப்பின் (WTO) அமைதி விதியை இந்தியா 7-வது முறையாகப் பயன்படுத்தியுள்ளது.
- 2013 ஆம் ஆண்டில் பாலியில் நடைபெற்ற WTO அமைச்சர்கள் மாநாட்டில், இந்த அமைதி விதி ஒரு இடைக்கால ஏற்பாடாக ஒப்புக் கொள்ளப் பட்டது.
- உணவுப் பாதுகாப்பிற்கான பொது இருப்பு திட்டங்களின் கீழ் வளரும் நாடுகள் மானியங்களை வழங்க இது அனுமதிக்கிறது.
- வரம்புகள் மீறப்பட்டாலும், WTO-வின் தகராறு தீர்வு அமைப்பில் எழும் சட்டரீதியான சவால்களிலிருந்து இத்தகைய மானியங்களை இது பாதுகாக்கிறது.
- இந்த மானியங்கள், அரசால் பயிர்கள் கொள்முதல் செய்யப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் (MSP) தொடர்புடையவை.
- உலக வர்த்தக அமைப்பில் உணவுப் பாதுகாப்புக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை இது ஒரு தற்காலிக நடவடிக்கையாகும்.

Post Views:
18