TNPSC Thervupettagam

WWF லிவிங் பிளானட் அறிக்கை 2026

October 12 , 2026 13 days 142 0
  • உலகளாவிய இயற்கை நிதியமானது (WWF) 2026 ஆம் ஆண்டிற்கான லிவிங் பிளானட் அறிக்கையை வெளியிட்டது, இது 1970 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கண்காணிக்கப்பட்ட உலகளாவிய வனவிலங்கு உயிரினத் தொகையின் சராசரி அளவில் 73% வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
  • லண்டன் விலங்கியல் சங்கத்துடன் (ZSL) இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை 5,790 முதுகெலும்பு உயிரினங்களை ஆய்வு செய்தது.
  • நன்னீர் வனவிலங்கு உயிரினத் தொகையானது 85% என்ற அளவில் அதிகபட்ச சரிவைப் பதிவு செய்துள்ளது, அதைத் தொடர்ந்து நிலப்பரப்பு உயிரினங்கள் 69% மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் 59% சரிவைப் பதிவு செய்துள்ளன.
  • இந்தியாவின் வனவிலங்குப் பாதுகாப்பு ஆதாயங்களில் 3,682 புலிகள் (2022), 891 ஆசிய சிங்கங்கள் (2025), 3,300 க்கும் மேற்பட்ட ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் மற்றும் 718 பனிச்சிறுத்தைகள் அடங்கும்.
  • இந்தியாவின் முதல் நாடு தழுவிய நதி டால்பின் மதிப்பீடானது, 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 28 நதிகளில் 8,507 கிமீ பரப்பளவில் கணக்கெடுக்கப்பட்ட நதி அமைப்புகளில் 6,324 கங்கை நதி டால்பின்கள் உள்ளதாக மதிப்பிட்டுள்ளது.
  • இந்தியாவில் சாதாரண சிறுத்தைகளின் எண்ணிக்கை 13,874 என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் கண்காணிக்கப்பட்ட வனவிலங்கு உயிரினத் தொகையானது 1970 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 49% குறைந்துள்ளது, இது 787 சிற்றினங்களில் இருந்து 4,664 உயிரினத் தொகைகளை அடிப்படையாகக் கொண்டது.
  • வாழ்விட இழப்பு மற்றும் சீரழிவு ஆகியவை அடிக்கடி பதிவாகும் அச்சுறுத்தல்களாக உள்ளன, அதனைத் தொடர்ந்து அதிகப்படியான சுரண்டல், பருவநிலை மாற்றம், மாசுபாடு, ஆக்கிரமிப்பு இனங்கள் மற்றும் நோய்கள் ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்