உலகளாவிய இயற்கை நிதியமானது (WWF) 2026 ஆம் ஆண்டிற்கான லிவிங் பிளானட் அறிக்கையை வெளியிட்டது, இது 1970 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கண்காணிக்கப்பட்ட உலகளாவிய வனவிலங்கு உயிரினத் தொகையின் சராசரி அளவில் 73% வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
லண்டன் விலங்கியல் சங்கத்துடன் (ZSL) இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை 5,790 முதுகெலும்பு உயிரினங்களை ஆய்வு செய்தது.
நன்னீர் வனவிலங்கு உயிரினத் தொகையானது 85% என்ற அளவில் அதிகபட்ச சரிவைப் பதிவு செய்துள்ளது, அதைத் தொடர்ந்து நிலப்பரப்பு உயிரினங்கள் 69% மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் 59% சரிவைப் பதிவு செய்துள்ளன.
இந்தியாவின் வனவிலங்குப் பாதுகாப்பு ஆதாயங்களில் 3,682 புலிகள் (2022), 891 ஆசிய சிங்கங்கள் (2025), 3,300 க்கும் மேற்பட்ட ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் மற்றும் 718 பனிச்சிறுத்தைகள் அடங்கும்.
இந்தியாவின் முதல் நாடு தழுவிய நதி டால்பின் மதிப்பீடானது, 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 28 நதிகளில் 8,507 கிமீ பரப்பளவில் கணக்கெடுக்கப்பட்ட நதி அமைப்புகளில் 6,324 கங்கை நதி டால்பின்கள் உள்ளதாக மதிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் சாதாரண சிறுத்தைகளின் எண்ணிக்கை 13,874 என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் கண்காணிக்கப்பட்ட வனவிலங்கு உயிரினத் தொகையானது 1970 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 49% குறைந்துள்ளது, இது 787 சிற்றினங்களில் இருந்து 4,664 உயிரினத் தொகைகளை அடிப்படையாகக் கொண்டது.
வாழ்விட இழப்பு மற்றும் சீரழிவு ஆகியவை அடிக்கடி பதிவாகும் அச்சுறுத்தல்களாக உள்ளன, அதனைத் தொடர்ந்து அதிகப்படியான சுரண்டல், பருவநிலை மாற்றம், மாசுபாடு, ஆக்கிரமிப்பு இனங்கள் மற்றும் நோய்கள் ஆகியவை உள்ளன.