X-Guard ஒளியிழை மூலம் இணைக்கப்பட்ட ரேடார் ஏய்ப்பு அமைப்பு
August 29 , 2025 24 days 76 0
எதிரி நாட்டு ரேடார் மற்றும் எறிகணைகளை குழப்புவதற்காக, இந்திய விமானப் படையானது, சிந்தூர் நடவடிக்கையின் போது ரஃபேல் போர் விமானங்களில் செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்பட்ட X-Guard ஒளியிழை மூலம் இணைக்கப் பட்ட ரேடார் ஏய்ப்பு அமைப்பினைப் பயன்படுத்தியது.
இஸ்ரேலின் ரஃபேல் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட X-Guard, ரஃபேலின் ரேடார் மற்றும் மின்னணு அடையாளங்களைப் பிரதிபலிக்கச் செய்து அச்சுறுத்தல் ஆயுதங்களை தவறாக வழிநடத்துகிறது.
பாகிஸ்தான் விமானப்படையின் J-10C போர் விமானங்கள் உண்மையான விமானங்களுக்குப் பதிலாக இந்த ஏமாற்று விமானங்களை குறி வைத்து, தவறான தாக்குதலை ஏற்படுத்தின.
மேம்பட்ட நுட்பம் கொண்ட எறிகணைகளுக்கு எதிராக பல் அடுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்காக இந்த அமைப்பு ரஃபேலின் SPECTRA மின்னணுப் போர்த் தொகுப்பு அமைப்புடன் செயல்படுகிறது.