CERN அமைப்பு 'Xi-cc-plus' எனப்படும் புதிய துகளைக் கண்டறிந்துள்ளதாக அறிவித்து உள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு, பெரிய ஹட்ரான் மோதுவி (LHC) இயந்திரத்தில் உள்ள LHCb (பெரிய ஹேட்ரான் மோதி இயந்திர அலகு) ஆய்வுத் திட்டத்தின் மூலம் நிகழ்த்தப் பட்டது.
Xi-cc-plus என்பது இரண்டு சார்ம் குவார்க்குகள் மற்றும் ஒரு கீழ் குவார்க்கால் ஆன ஒரு கனமான பேரியான் துகள் ஆகும்.
இது புரோட்டானை விடச் சுமார் 4 மடங்கு கனமானது மற்றும் மிகக் குறுகிய ஆயுட் காலம் கொண்ட மிகவும் நிலையற்ற துகள் ஆகும்.
LHC ஏற்கனவே ஹிக்ஸ் போசான், விசித்திரமான ஹேட்ரான்கள் (நான்கு அல்லது ஐந்து குவார்க்குகளால் ஆன துகள்கள்) மற்றும் அரிய B-மேசன் சிதைவுகள் போன்ற முக்கியத் துகள்களைக் கண்டறிந்துள்ளது.