மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், புதுடெல்லியில் “Y Break” எனப்படும் யோகா நெறிமுறைகளுக்கான கைபேசிச் செயலியினை வெளியிட்டார்.
இந்தச் செயலியானது மொரார்ஜி தேசாய் தேசிய யோகா கல்வி நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டுள்ளது.
Y – Break (அல்லது Yoga Break) எனும் கைபேசி செயலியானது தனித்துவமிக்க 5 நிமிட யோகா நெறிமுறைக்கான செயலியாகும்.
இது குறிப்பாக வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களது பணியிடங்களில் உள்ள மன அழுத்தத்தைக் குறைக்கவும், புத்துணர்ச்சி பெற்று வேலையில் மீண்டும் கவனம் செலுத்தவும் வழி செய்யுமாறு வடிவமைக்கப் பட்டுள்ளது.