கல்வி அமைச்சகமானது பிரதமரின் ‘இளம் நூலாசிரியர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதலுக்கான திட்டம்’ ஒன்றினை (YUVA) தொடங்கி வைத்துள்ளது.
இந்த திட்டமானது இந்தியாவில் படித்தல், எழுதுதல் மற்றும் புத்தக கலாச்சாரம் போன்றவற்றை மேம்படுத்தும் நோக்கில் 30 வயதுக்கும் கீழான இளம் மற்றும் வளர்ந்து வரும் நூலாசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கும் ஒரு வழிகாட்டுத் திட்டம் ஆகும்.
மேலும் இந்திய நாட்டினையும் இந்திய நூலாசிரியர்களின் படைப்பினையும் உலகம் முழுவதும் வெளிப்படுத்தும் YUVA என்பதன் விரிவாக்கம் “Young, Upcoming and Versatile Authors” (இளம், வளர்ந்து வரும் பல்துறை நூலாசிரியர்கள்) என்பதாகும்.
இந்த திட்டமானது இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி எழுதுவதற்கு இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்கான பிரதமரின் நோக்கத்தின் ஓர் அங்கமாக செயல்படும்.
இந்த திட்டமானது கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியத் தேசியப் புத்தக அறக்கட்டளையினால் நடைமுறைப் படுத்தப்படும்.