TNPSC Thervupettagam

YUVAi முன்னெடுப்பு

December 28 , 2023 582 days 425 0
  • உலக செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மை அமைப்பின் (GPAI) தலைமைப் பொறுப்பினைக் கொண்டுள்ள இந்தியா, GPAI உச்சி மாநாட்டைப் புது டெல்லியில் வெற்றிகரமாக நடத்தியது.
  • YUVAi - மேம்பாட்டிற்கான இளையோர் சமூகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலமான வளர்ச்சி என்பது தேசிய மின் ஆளுகைப் பிரிவு (NeGD) மற்றும் இன்டெல் இந்தியா ஆகியவற்றின் கூட்டு முன்னெடுப்பு ஆகும்.
  • இந்தத் திட்டம் ஆனது, இளையோர்களுக்கு அத்தியாவசிய செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டு இந்நிகழ்வில் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • YUVAi ஆனது நாடு முழுவதும் உள்ள 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் மத்தியில் செயற்கை நுண்ணறிவு பற்றிய ஆழ்ந்த புரிதலை வளர்ப்பதையும், அவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன்களை வழங்குவதையும், மனிதர்களுக்கான பயனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு வடிவமைப்பாளர்களாகவும் பயனர்களாகவும் ஆவதற்கு அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்