ரேடியோ காலர்/ரேடியோ குறியீடு பொருத்தப்பட்ட வெண்முதுகு பிணந்திண்ணிக் கழுகை (Z25) வனவிலங்கு பாதுகாப்பு அறிவியலாளர்கள் கண்காணித்து வந்தனர், ஆனால் தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகத்தில் மின் கடத்தி கம்பியில் மின்சாரம் தாக்கி அது இறந்தது.
பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் (BNHS) மூலம் அவற்றின் நடமாட்டத்தை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதற்காக ரேடியோ டெலிமெட்ரி/தொலைஅளவீட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டு, சிறை பிடிக்கப்பட்ட நிலையில் வளர்க்கப்பட்ட ஐந்து கழுகுகளில் Z25-உம் ஒன்றாகும்.
இந்தப் பறவை ஹரியானாவில் உள்ள ஜடாயு பாதுகாப்பு இனப்பெருக்க மையத்தில் வளர்க்கப்பட்டு, மகாராஷ்டிராவின் தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத்தில் விடுவிக்கப் பட்டு, பின்னர் கர்நாடகாவில் மீட்கப்பட்டு முதுமலைக்கு மாற்றப்பட்டது.
வனப்பகுதியில் வாழ்வதற்குப் பதிலாக மனிதர்கள் அளிக்கும் உணவுக்கு அது பழகி விட்டதால், Z25 கழுகு தொடர்ந்து மனிதக் குடியிருப்புகளை நோக்கிச் சென்றதை கண்காணிப்புத் தரவுகள் காட்டுகின்றன.
ஆபத்தான நிலையில் உள்ள பறவைகளைக் கண்காணிக்கவும், அவற்றை விரைவாகக் கண்டறியவும், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் ரேடியோ டெலிமெட்ரி/தொலைஅளவீட்டுக் கருவிகள் அறிவியலாளர்களுக்கு உதவுகிறது.