ஃபார்ச்சூன் இந்தியா 2021 ஆம் ஆண்டு ஆண்டின் மிக அதிகாரம் வாய்ந்த 50 பெண்மணிகள் பட்டியல்
March 13 , 2022 1254 days 586 0
இப்பட்டியலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் முதல் இடத்தைப் பிடித்து உள்ளார்.
இவரைத் தொடர்ந்து ரிலையன்ஸ் பவுண்டேசனின் தலைவர் மற்றும் நிறுவனரான நீதா அம்பானி இடம் பிடித்துள்ளார்.
ஃபார்ச்சூன் இந்தியா அமைப்பினால் வெளியிடப்படும் இந்தப் பட்டியலானது, உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியலாளர் சௌமியா சுவாமிநாதன், மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கீதா கோபிநாத் ஆகியோரையும் உள்ளடக்கியது.
இந்தப் பட்டியலில் இடம் பெற்ற பிற நபர்கள் டெசி தாமஸ், சுசித்ரா எல்லா, கிரண் மசூம்தார் சா, ரெட்டி சகோதரிகள் மற்றும் ஈசா அம்பானி ஆகியோராவர்.