ஃபார்முலா ஜூனியர் கார் பந்தயத் தொடர் 2018 சேம்பியன் ஷிப்
May 27 , 2018 2601 days 842 0
தமிழ்நாட்டின் கோயமுத்தூரில் நடைபெற்ற ஃபார்முலா ஜூனியர் கார் பந்தயத் தொடர் 2018 சேம்பியன்ஷிப் போட்டியில் கோயமுத்தூரைச் சேர்ந்த கார் பந்தைய வீரரான பாலா பிரசாத் வெற்றி பெற்றுள்ளார்.
ஃபார்முலா ஜூனியர் கார் பந்தயத் தொடர் 2018 சேம்பியன்ஷிப் போட்டியானது MECO மோட்டார் ஸ்போர்ட்ஸ்-ஆல் நடத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்போட்டியானது, பந்தயக் கார்களின் ஓட்டுநர்களுக்கு தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்கு தம்மை தயார் செய்வதற்கான தளத்தை வழங்குகிறது.
இந்தப் போட்டியில் முறையான FMSCI தேசிய கார்பந்தய உரிமம் கொண்டுள்ள பதினான்கு வயதிற்கு மேற்பட்ட எவரும் பங்கேற்கலாம். இப்போட்டி FMSCI (Federation of Motor Sports Clubs of India) அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட போட்டியாகும்.