ஃபிட் இந்தியப் பள்ளி - உடற்தகுதி அடிப்படையில் பள்ளிகள் தரவரிசை
December 6 , 2019 2078 days 637 0
ஃபிட் (உடற்தகுதி) இந்தியப் பள்ளிகள் என்ற ஒரு புதிய முன்னெடுப்பானது தொடங்கப் பட்டுள்ளது.
இது பின்வருவனவற்றின் அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளின் தர நிர்ணய/தரவரிசைப் படுத்தும் ஒரு முறையாகும்.
பள்ளியில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உடற்தகுதியை வளர்ப்பதற்கு அப்பள்ளியினால் வழங்கப்படும் முக்கியத்துவம்.
உடற்பயிற்சிக்காக அப்பள்ளியில் இருக்கின்ற வசதிகள்.
ஃபிட் இந்தியப் பள்ளித் தரவரிசையானது மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது - முதல் நிலைத் தரவரிசை கொண்ட ஃபிட் இந்தியப் பள்ளிகள், ஃபிட் இந்தியப் பள்ளி (3 நட்சத்தித் தரவரிசை) மற்றும் ஃபிட் இந்தியப் பள்ளி (5 நட்சத்திரத் தரவரிசை).
இந்தத் தரவரிசையை அடையும் பள்ளிகள் அதிகாரப்பூர்வ ஃபிட் இந்திய இலச்சினை மற்றும் அதன் கொடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.