TNPSC Thervupettagam

ஃபுடலா ஏரி வழக்கு

October 12 , 2025 7 days 38 0
  • ஃபுடலா ஏரி தொடர்பான மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
  • ஃபுடலா ஏரி ஆனது குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத்திற்காக கட்டமைக்கப்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு நீர்நிலை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • 2017 ஆம் ஆண்டு ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளின் 2(1)(g) வது விதியின் கீழ் இந்த ஏரி ஈரநிலமாக தகுதி பெறவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
  • 21வது சரத்தின் கீழ் பொது நம்பிக்கை மற்றும் ஆரோக்கியமானச் சூழலுக்கான அரசியலமைப்பு உரிமையின் கோட்பாட்டை இந்தத் தீர்ப்பு வலியுறுத்தியது.
  • தெலுங்கெடி குளம் என்றும் அழைக்கப்படும் மகாராஷ்டிராவின் ஃபுடலா ஏரியானது , 1799 ஆம் ஆண்டு அப்போதைய நாக்பூரின் ஆட்சியாளரால் அப்பகுதியின் நீர்ப்பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுமார் 200 ஹெக்டேர் நீர்ப்பிடிப்புப் பகுதியுடன் கட்டமைக்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்