ஃபோமோஃப்ளேஷன் என்பது நுகர்வோர் உளவியல் மற்றும் திடீர் விலை உயர்வுக்கு வழி வகுக்கின்ற விநியோக நெருக்கடிகள் ஆகியவற்றினால் உருவாகும் தவற விடப் படும் என்ற பயத்தினால் இயக்கப்படும் பணவீக்கத்தைக் குறிக்கிறது.
"தவற விடப்படும் என்ற பயம்" மற்றும் "பணவீக்கம்" ஆகியவற்றை இணைப்பதன் மூலம் இந்த சொல் உருவாக்கப்பட்டது.
பொருளாதார நிலைமைகள் உத்தரவாதம் அளிக்கப்பட்டதை விட விலைகள் வேகமாக உயர்ந்த சூழ்நிலைகளை இது விவரித்தது.
2025 ஆம் ஆண்டில், நுழைவு இசைவுக் கட்டணங்களின் அதிகரிப்பு சர்வதேச பயணிகளிடையே பயத்தினைத் தூண்டியது, இதனால் கடைசி நிமிட விமான முன் பதிவுகளில் அதிகரிப்பு ஏற்பட்டது.
இந்த திடீர் தேவையானது பயணச் சீட்டு விலைகளை வழக்கமான கட்டணத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக உயர்த்தியது.
2022 ஆம் ஆண்டில், பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்ட எரிபொருள் பற்றாக் குறையானது பயத்தினால் தூண்டப்பட்ட கொள்முதலுக்கு வழி வகுத்தது என்பதோடு இது எரிபொருள் விலைகளை மேலும் அதிகரித்தது.
பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களிலும் இதே போன்ற பயத்தால் இயக்கப்படும் கொள்முதல் நடவடிக்கை காணப்பட்டது, இதில் பற்றாக்குறையானது பதுக்கல் மற்றும் விலை உயர்வுக்கு வழி வகுத்தது.
பருப்பொருளாதார காரணிகளால் ஏற்படும் வழக்கமான பணவீக்கத்தைப் போல அல்லாமல், ஃபோமோஃப்ளேஷன் நுகர்வோர்களின் எதிர்வினைகள், ஊடகங்களின் தாக்கங்கள் மற்றும் தேவை எதிர்பார்ப்பு ஆகியவற்றில் வேரூன்றியுள்ளது.