TNPSC Thervupettagam

அகமதாபாத் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் வேளாண் நில விலைக் குறியீடு

June 7 , 2022 1159 days 560 0
  • அகமதாபாத்தின் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனமானது வேளாண் நிலங்களின் விலைக் குறியீட்டை உருவாக்குவதற்காக வேளாண் நிலங்களுக்கான மின்-சந்தையான SfarmsIndia என்ற நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.
  • இது இந்தத் தளத்தில் மேற்கொள்ளப்படும் கொள்முதல் மற்றும் விற்பனையை அடிப்படையாகக் கொண்டது.
  • இந்தியாவில் வேளாண் நிலங்களின் விலை மீதான தரக் கட்டுப்பாடு சார்ந்த தரவைப் பதிவு செய்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்தக் குறியீடானது வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இந்தக் குறியீடு, சந்தையில் (SfarmsIndia) விலை மாற்றங்களைக் கண்காணிப்பதோடு, மாதாந்திர அடிப்படையிலான ஒரு கலப்பு விலை நிர்ணய வழிமுறையையும் உருவாக்கும்.
  • இது ஆண்டிற்கு இருமுறை புதுப்பிக்கப்படும்.
  • இதற்கு அகமதாபாத்தின் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் மற்றும் SFarmsIndia நில விலைக் குறியீடு (ISALPI) என்று பெயரிடப்படும்.
  • கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இது சோதனை அடிப்படையில் தொடங்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்