அகலப்பட்டை அலைவரிசைக்கான வரையறையில், தொலைத் தொடர்பு சேவை வழங்கீட்டு நிறுவனங்கள் தற்போது குறைந்தபட்சம் 2 Mbps இணையச் சேவை வேகம் வழங்க வேண்டும்.
இதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டு முதல் அந்த அலைவரிசையில் நான்கில் ஒரு பங்கு, அதாவது 512 Kbps சேவை வழங்கப்பட வேண்டியிருந்தது.
2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இந்தியாவில் உள்ள அகலப்பட்டை அலைவரிசை சேவை பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 825.38 மில்லியன் ஆகும்.
2012 ஆம் ஆண்டிற்கான தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கையானது, 2015 ஆம் ஆண்டிற்குள் அகலப் பட்டை அலைவரிசை சேவைக்கான வரையறையை 2 Mbps ஆக மாற்றுவதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளது.