TNPSC Thervupettagam

அகல் விளக்குத் திட்டம்

August 12 , 2025 3 days 153 0
  • புதுக்கோட்டையில் உள்ள கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு ‘அகல் விளக்கு’ எனும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டமானது, இணையவெளிப் பாதுகாப்பில் வலுவான கவனம் செலுத்துவதுடன், மன, உடல் மற்றும் சமூக ரீதியான சவால்களிலிருந்து சிறுமிகளான மாணவிகளை (9 - 12 ஆம் வகுப்புகள்) பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மாநில அரசானது அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் இந்தத் திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.
  • இந்த முன்னெடுப்பின் கீழ், ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர் அடங்கிய குழுக்கள், மாணவிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளைப் பரிந்துரைக்கும்.
  • இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக உளவியல் ஆலோசனையும் வழங்கப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்