TNPSC Thervupettagam

அகில இந்திய உயர் கல்வி ஆய்வு 2018-19

September 25 , 2019 2122 days 851 0
  • மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது அகில இந்திய உயர் கல்விக் கணக்கெடுப்பின் (All India Survey on Higher Education - AISHE) கீழ் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பிற உயர் கல்வி நிறுவனங்கள் குறித்த ஆன்லைன் (நிகழ்நேர) தகவல்களைச் சேகரிக்கின்றது.

மொத்தப் பதிவு விகிதம்

  • உயர் கல்வியில் மொத்தப் பதிவு விகிதமானது (Gross Enrolment Ratio - GER) 2017-18ல் 25.8 சதவீதத்திலிருந்து 2018-19ல் 26.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • GER ஆனது 18-23 வயதுக்குட்பட்டவர்களுக்குக் கணக்கிடப்படுகின்றது.

GER

விகிதம்

ஆண்கள்

26.3%

பெண்கள்

26.4%

பட்டியல் வகுப்பினர்

23%

பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்

17.2%

 

  • இதில் அதிக எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கையுடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன.
கல்லூரிகளின் எண்ணிக்கை
  • கல்லூரி (எண்ணிக்கை) அடர்த்தி என்பது தகுதியான ஒரு லட்சம் மாணவர்களுக்கு (18-23 வயதுக்குட்பட்ட மாணவர்கள்) இருக்கும் கல்லூரிகளின் எண்ணிக்கையாகும்.
  • உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், ஹரியாணா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளைக் கொண்ட முதல் 8 மாநிலங்கள் ஆகும்.
  • கல்லூரிகளின் அகில இந்திய சராசரி எண்ணிக்கையான 28 உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது பீகாரில் 7 கல்லூரிகள் முதல் கர்நாடகாவில் 53 கல்லூரிகள் வரை வேறுபடுகின்றது.
  • கல்லூரிகளின் எண்ணிக்கையில் 880 கல்லூரிகளுடன் பெங்களூர் நகரம் முதலிடத்தில் உள்ளது.
  • 60.53% கல்லூரிகள் கிராமப் புறத்தில் அமைந்துள்ளன.
  • 11.04% கல்லூரிகள் பெண்களுக்கு மட்டுமே உரியவையாகும்.
  • உயர் கல்வியில் மொத்த சேர்க்கையானது 37.4 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • உயர் கல்வியில் மொத்த சேர்க்கையில் பெண்கள் 48.6% ஆவர்.
வெளிநாட்டு மாணவர்கள்
  • அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு மாணவர்கள் அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்து கல்வி பயிலுகின்றனர். இந்தியாவில் வந்து கல்வி பயிலும் மொத்த வெளிநாட்டு மாணவர்களில் நேபாளம் 26.88% ஐக் கொண்டுள்ளது.
  • அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் (9.8%), வங்க தேசம் (4.38%), சூடான் (4.02%), பூட்டான் (3.82%), நைஜீரியா (3.4%) ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியாவிற்கு வந்து கல்வி பயிலுகின்றனர்.
மாணவர் ஆசிரியர் விகிதம்
  • வழக்கமான முறையில் செயல்படும் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் ஆசிரியர் விகிதமானது 29 ஆக இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்