அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு (AISHE) அறிக்கை 2023-24: உயர்கல்வி வளர்ச்சி
July 15 , 2026 12 days 110 0
மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு (AISHE) அறிக்கை 2023-24-இன் படி, இந்தியாவின் உயர்கல்வி சேர்க்கை சாதனை அளவாக 4.5 கோடி மாணவர்களை எட்டியுள்ளது.
உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (GER) 2014-15 ஆம் ஆண்டில் 23.7 ஆக இருந்த நிலையில் இருந்து, 2023-24 ஆம் ஆண்டில் 30 ஆக உயர்ந்துள்ளது.
பெண் மாணவர்களின் சேர்க்கை 2.24 கோடியை எட்டியுள்ளது என்ற நிலையில் மொத்த மாணவர்களில் பெண்கள் 49.7% ஆக உள்ளனர்; இதில் பாலினச் சமத்துவக் குறியீடு (GPI) 1.08 ஆக உள்ளது.
2014-15 ஆம் ஆண்டு முதல் பட்டியலிடப்பட்ட சாதியினரின் (SCs) சேர்க்கை 51.4%-மும், பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் (STs) சேர்க்கை 75.7%-மும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBCs) சேர்க்கை 60.2%-மும் அதிகரித்துள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) படிப்புகளில் சேர்க்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது, இதில் மாணவிகள் 44% பங்களிப்பை வழங்கி உள்ளனர்.
AISHE என்பது உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், ஆசிரியர்கள், உள் கட்டமைப்பு மற்றும் கல்வித் திட்டங்கள் பற்றிய தரவுகளைச் சேகரிப்பதற்காக மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்படும் ஒரு வருடாந்திர கணக்கெடுப்பாகும்.