அகில இந்திய சபாநாயகர் மாநாடு 2026 – உத்தரப் பிரதேசம்
January 25 , 2026 2 days 34 0
86வது அகில இந்திய சபாநாயகர் மாநாடு (AIPOC) லக்னோவில் நடைபெற்றது.
இந்த மாநாடு பாராளுமன்றம் மற்றும் அனைத்து மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச சட்டமன்றங்களின் சபாநாயகர்களுக்கான உயர் நிலை தேசிய மன்றமாகும்.
இது சட்டமன்றச் செயல்திறன், பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் விவாத தரத்தை மேம்படுத்துவதையும், பாராளுமன்றம் மற்றும் மாநிலச் சட்ட மன்றங்களிடையே சிறந்த நடைமுறைகளை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
24 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் இருந்து சுமார் 36 சபாநாயகர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்ட மாநாடு இன்று வரை மிகப்பெரிய AIPOC ஆக அமைகிறது.
மாநிலச் சட்டமன்றங்களில் ஆண்டுக்கு குறைந்தது 30 அமர்வுகளை உறுதி செய்தல் மற்றும் சட்டமன்றச் செயல்திறனை ஒப்பிட்டு மேம்படுத்த தேசிய சட்டமன்றக் குறியீட்டை உருவாக்குதல் உள்ளிட்ட ஆறு முக்கியத் தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப் பட்டன.
இது "Strong Legislature‑Prosperous Nation" என்ற கருத்துருவில் நடைபெற்றது.